பெருங்களத்துார் ரயில் நிலையத்தில் இரவில் அலறிய பெண் - கத்தியால் குத்திய மர்ம நபர்..!

Chennai Tamil Nadu Police
By Thahir Aug 06, 2023 04:30 AM GMT
Report

சென்னை பெருங்களத்துார் ரயில் நிலையத்தில் 52 வயது பெண்ணை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணுக்கு கத்திகுத்து 

சென்னையை அடுத்த பெருங்களத்துார் ரயில் நிலையத்தில் தமிழ்செல்வி (52) என்ற பெண் இரவில் ரயிலுக்காக காத்திருந்தார்.

woman stabbed at perungalathur railway station

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் அலறிய அந்த பெண் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.