வலி தாங்க முடியல... வயிற்றை கிழித்துக்கொண்ட கர்ப்பிணி
உத்தரபிரதேசத்தில் பிரசவ வலியை தாங்க முடியாத 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், காய்கறி வெட்டும் கத்தியால் வயிற்றை கிழித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் Nandwal கிராமத்தை சேர்ந்த பெண் Nankai(வயது 35), கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவரது கணவர் இறந்துவிட தனியாக வசித்து வந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த Nankai-க்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது, வலி அதிகமாகவே தாங்கிக்கொள்ள முடியாத Nankai, சமையலில் காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை கொண்டு வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக Nankaiயை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். காயங்கள் அதிகம் இருந்ததால் ரத்தப்போக்கு காரணமாக Nankaiயை மாவட்ட அரசு மருத்துமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதித்தனர், தொடர்ந்து லக்னோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், “வலி தாங்க முடியாமல் தான் இப்படிச் செய்தேன்” என அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்! Manithan