காதலுக்கு கண் இல்லைதான்: விமானங்களை காதலித்து திருமணம் செய்ய விரும்பும் பெண்!
ஜெர்மனி நாட்டில் பெண் ஒருவரின் காதல் கதை அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.
ஆப்ஜெக்டம் செக்சுவல்
ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் பொருள்கள் மீது பாலியல் ரீதியாக ஈர்க்கப்படுவதாக இளம் பெண் ஒருவர் தான் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த 23 வயது இளம் பெண் சாரா ரோடோ. இந்தப் பெண்ணை தன்னை ஆப்ஜெக்டம் செக்சுவல் என்று சொல்லிக் கொள்கிறார்.
விமானத்தின் மீது அதீத காதல்
அதாவது மனிதர்களைக் காட்டிலும், உயிரற்ற பொருட்கள் மீது தான் இந்தப் பெண் பாலியல் ரீதியாக ஈர்க்கப்படுகிறார். அதிலும் குறிப்பாகப் பயணிகள் விமானத்தின் மீது அதீத காதலை உணர்வதாக அப்பெண் தெரிவித்தார்.
ஜெர்மனியின் டார்ட்மண்டைச் சேர்ந்த சாரா, மனிதர்களுடன் இருப்பது தனக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் கூட விமானங்கள் உடன் இருப்பதே தன்னை முழுமையாக்குவதாக தெரிவித்துள்ளார்.
அவரது படுக்கையில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட மினி விமானங்கள் பொம்மைகளை வைத்துள்ளார். மேலும், விமானத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அப்பெண் அடிக்கடி விமானத்தில் செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்.
சாரா தனது ஓய்வு நேரத்தை விமானத்தைக் கண்டறிவதிலேயே செலவிடுகிறார். கைகள் முழுவதிலும் விமானத்தின் படங்களைப் பச்சை குத்திக் கொண்டு இருக்கிறார்.
இருப்பினும், ஜெர்மனி நாட்டின் சட்டப்படி உயிரற்ற பொருட்களைத் திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமானதாகும். இது குறித்து அப்பெண் கூறுகையில், எனக்கு டீனேஜ் பருவத்திலிருந்தே ஆண்களைக் காட்டிலும் பொருள்கள் மீது ஈர்ப்பு இருந்தது.
நான் 14 வயதில் அதை முதலில் கவனித்தேன். விமானத்திற்கு முன்பு, எனக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது ஈர்ப்பு இருந்தது. எனக்கு உண்மையில் யார் மீது ஈர்ப்பு உள்ளது என்பதைக் கண்டறிய இரு ஆண்களுடன் உறவில் இருந்தேன்.
இருப்பினும், அவர்கள் மீது எனக்குக் காதல் வரவில்லை என்பதை நான் விரைவில் உணர்ந்தேன். நெருக்கமாக இருப்பது கூட பொருட்கள் உடன் இருக்கும் போது தான் எனக்கு முழு திருப்தி கிடைக்கிறது.
டிக்கி விமானத்துடன் தான் எப்போதும் நான் தூங்குவேன். அதைத் திருமணம் செய்து கொள்வதே எனது விருப்பம். டிக்கி விமானம் என்றால் எனக்கு உயிர்.
குறிப்பாக அதன் முகம், இறக்கைகள் மற்றும் இயந்திரம் எனக்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றன என்றார்.