பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ரூ.11 லட்சத்திற்கு வீட்டையே விற்ற 50வயது பெண் - இப்போது எங்கு வசிக்கிறார் தெரியுமா?
முக பொலிவிற்காக தனது வீட்டை விற்று பெண் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துள்ளார்.
பிளாஸ்டிக் சர்ஜெரி
என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றும் தமது முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்றும் பல பிரபலங்கள் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொள்வார்கள். பிரபலங்கள் மட்டுமல்ல இப்போது சாதாரண ஆட்களும் இதைச் செய்து கொள்கிறார்கள்.
பிறர் பார்வையில் சிறப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக இதன் மூலம் வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் ஏராளம். அந்த வகையில் அமெரிக்கவைச் சேர்ந்த பெண் ஒருவர் இளமையாகவும்,அழகாகவும்,ஒல்லியாகவும் சிறப்பாக மற்றவர்கள் முன் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக வாழும் வீட்டையே விற்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்.
வீட்டை விற்ற பெண்
அமேரிக்காவின் அரிஸோனாவில் வசித்து வருபவர் 50 வயதான கெல்லி பீஸ்லி. இவர் 'ஃபேஸ்லிஃபிட்' என்ற 14,000 டாலர் இந்திய மதிப்பில் (ரூ.11 லட்சம்) மதிப்புள்ள அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்காக தனது மூன்று படுக்கரைகள் கொண்ட வீட்டை விற்றுள்ளார். இவரின் 48 வயதில் முதுமையின் அறிகுறிகளான சுருக்கங்கள் மற்றும் புள்ளிகள் தனது முகத்தின் பிரதிபலிக்க தொடங்கியதால் தனது முகம் கடுமையாக மாறுவதை அவர் கவனித்துள்ளார்.
இதற்காக ஃபில்லர்கள் போன்ற ஊசி மருந்துகளை கடந்த 15 ஆண்டுகளாக தான் பயன்படுத்தியும் விரும்பிய மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை இதனால் தான் அறுவை சிகிச்சை செய்தேன் என்று கெல்லி தெரிவித்தார். மேலும் நான் எனது தோற்றத்தை நேசிக்கிறேன், என்னால் முடிந்த வரை மிகவும் இளமையாக, அற்புதமாக இருக்க விரும்புகிறேன் என்றும் கூறினார் . தனது 50 வயதில் இந்த செயல்முறை எனக்கு தேவைப்படுகிறது எனபதை நான் உணர்ந்தேன்.
ஆனால் உள்ளூரில் இதற்காக 60,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.49 லட்சம்) வரை கேட்டனர். இது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. ஆனால் மெக்சிகோவில் ஒரு பெண்ணின் வீடியோ பார்த்தேன் அதில் ரூ.11 லட்சத்திற்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் அவரின் முடிவுகளும் அற்புதமாக இருந்தது. அதனால் அங்கு போய் அறுவை சிகிச்சை செய்தேன்.
மேலும் அறுவை சிகிச்சை செய்வதில் மக்கள் பெருமைப்பட வேண்டும் என்றும் வெட்கப்படக் கூடாது என்றும் கெல்லி பீஸ்லி தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது வீட்டை விற்றதால் ஒரு வேனில் கெல்லி வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.