ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட நபர் - தனி ஆளாக காப்பாற்றிய பெண் அதிகாரி

Chennai
By Swetha Subash Apr 25, 2022 12:32 PM GMT
Report

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே நிலைதடுமாறி விழுந்த பயணி ஒருவரை அங்கிருந்த ரயில்வே பெண் போலீஸ் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றும் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நேற்று இரவு 11.30 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட நபர் - தனி ஆளாக காப்பாற்றிய பெண் அதிகாரி | Woman Railway Officer Rescues Man In Egmore

ரயில் கிளம்பிய போது ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் ஒருவர் சற்றும் எதிர்பாராத வகையில் நிலைதடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிக்கிக்கொண்டார்.

அப்போது அங்கு பணியிலிருந்த ரயில்வே பெண் போலீசார் மாதுரி, வேகமாக செயல்பட்டு துணிச்சலாக சிக்கிய நபரை ஒற்றைக் கையால் இழுத்து காப்பாற்றினார்.

ரயில்வே பெண் போலீசாரின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.