திருமணத்திற்கு அலுவலக நண்பர்கள் வராத காரணத்தால்.. வேலையை ராஜினாமா செய்த மணப்பெண் !
தனது திருமணத்திற்கு அலுவலக நண்பர்கள் வராத காரணத்தால் விரக்தியில் சீன பெண் ஒருவர் வேலையினை ராஜினாமா செய்துள்ளார்.
திருமணத்துக்கு அழைத்தது 70 பேர்
இரு மனங்கள் சேரும் திருமணம் என்பது வாழ்க்கையின் முக்கியமான ஒன்றாகும் , இந்த திருமணத்திற்கு மணமக்கள் தங்களுடன் பணியாற்றும் நண்பர்களை அழைப்பது வழக்கமான ஒன்றாகும் .

இந்த நிலையில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அலுவலக நண்பர்கள் 70 பேருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
மனமுடைந்து ராஜினாமா
ஆனால் அந்த பெண்ணின்திருமணத்திற்கு அலுவலக நண்பர்களில் ஒருவர் மட்டுமே வந்துள்ளார். அழைப்பிதழ் 70 பேருக்கு கொடுத்துள்ள நிலையில் 70 பேருக்கும் தயாரிக்கப்பட்ட உணவும் மீதமாகியுள்ளது.

இதனால் மனமுடைந்து போன இளம்பெண் திருமணம் முடிந்த அடுத்த நாளே தான் பணிபுரிந்த அலுவலகத்திற்கு சென்று தனது ராஜினாமா கடித்தை கொடுத்து, நான் இனியும் இந்த நிறுவனத்தில் பணிபுரிய விரும்பவில்லை" எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார் .
இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.