ஓட்டு கேட்டு வந்தால் கல்லால் அடிப்போம்; ப.சிதம்பரம் பிரச்சாரத்தை ஆவேசமாய் எதிர்த்த பெண்!

P. Chidambaram Sivagangai Lok Sabha Election 2024
By Swetha Apr 02, 2024 08:00 AM GMT
Report

சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் செய்ய மகனுடன் வந்த ப.சிதம்பரத்தை ஆவேசமாக பெண் எதிர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லால் அடிப்போம்

சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளரான கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக அவரது தந்தையார் ப.சிதம்பரம் தொகுதிக்குள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், காரைக்குடி அருகில் மித்ராவயல் கிராமத்திற்கு நேற்று வாக்கு சேகரிக்க சென்றுள்ளார்.

ஓட்டு கேட்டு வந்தால் கல்லால் அடிப்போம்; ப.சிதம்பரம் பிரச்சாரத்தை ஆவேசமாய் எதிர்த்த பெண்! | Woman Oppose While P Chidambaram Campaign

அப்போது, "கடந்த 5 ஆண்டுகளாக கார்த்தி சிதம்பரம் தொகுதி பக்கமே வரவில்லையே,ப.சிதம்பரம் பேசக் கூடாது" என பெண் ஒருவர் ஆவேசப்பட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த ப.சிதம்பரம், "நான் பேசுவதற்கு உரிமை உள்ளது. அதேபோல் நீங்கள் பேசுவதற்கும் உரிமை உள்ளது. முதலில் நான் பேசி விடுகிறேன். பின்னர் நீங்கள் பேசுங்கள்” என கூறினார்.

என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்; பிரச்சார மேடையில் கண் கலங்கிய பிரேமலதா!

என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்; பிரச்சார மேடையில் கண் கலங்கிய பிரேமலதா!

பிரச்சாரத்தில் எதிர்ப்பு

இருப்பினும் அப்பெண் தொடர்ந்து எதிர்த்ததால், ”அடுத்த தேர்தலில் இந்த அம்மாவுக்கு ஏதாவது ஒரு கட்சியில் சீட் கொடுத்து நிற்க வைங்க” என ப.சிதம்பரம் கிண்டலடித்தார். மேலும்,அந்த கிராமத்தில் மது அருந்திவிட்டு 3 பேர் இறந்து போனார்கள்.

ஓட்டு கேட்டு வந்தால் கல்லால் அடிப்போம்; ப.சிதம்பரம் பிரச்சாரத்தை ஆவேசமாய் எதிர்த்த பெண்! | Woman Oppose While P Chidambaram Campaign

இதனை கூட்டத்தில் இருந்த சிலர் சுட்டிக்காட்டி, “3 பேர் இறந்த சமயத்தில் எம்பி உள்ளிட்ட யாருமே வந்து எட்டிப்பார்க்கவில்லை. அதனால் யாரும் இங்கே ஓட்டு கேட்டு வரக்கூடாது. வந்தால் கல்லால் அடித்து விரட்டுவோம்" என்று கூறி எதிர்த்தனர்.