கோவிலுக்குள் ஆடையில்லாமல் வலம் வந்த பெண் - சன்னதிக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு!
கோவிலுக்குள் இளம்பெண் ஒருவர் ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து கோவில்
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் பிரபலமான கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்வது வழக்கம்.

அதன் வரிசையில், பாலிக்கு சுற்றுலா சென்ற ஜெர்மனியைச் சேர்ந்த 28 வயதுடைய தர்ஜா துஷின்ஸ் என்ற பெண் சென்றுள்ளார். அப்போது திடீரென தன்னுடைய ஆடைகளை கழற்றி விட்டு, வித்தியாசமாகவும், வினோதமாகவும் நடந்து கொண்டுள்ளார்.
எல்லை மீறிய பெண்
இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து வந்த போலீஸார் அவரை ஆடை அணிய செய்து கைது செய்துள்ளனர். அதன்பின் விசாரணையில் அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.