3 ஆண்களுடன் காதல் - தட்டிக்கேட்ட கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்த பெண்

youthmurder andhrapradesh illegarrelationship
By Petchi Avudaiappan Dec 10, 2021 05:06 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

குண்டூர் பகுதியில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த நாகமல்லேஸ்வரி என்பவருக்கு திருமணமான சில நாள்களிலே கணவர் மரணமடைய உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். பின் வயிற்றுப்பசியை போக்கிக்கொள்ள அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். 

அதேநேரம் கடப்பாவைச் சேர்ந்த லாரி க்ளீனரான பாஷா வீட்டைவிட்டு வெளியேறி குண்டூர் பகுதிக்கு வந்துள்ளார். லாக்டவுன் சமயம் என்பதால் வேலை தேடி அலைந்த அவருக்கு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஹோட்டலில் வேலை கிடைத்துள்ளது.

இதனிடையே பாஷாவுக்கும் நாகமல்லேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்த தொடங்கியுள்ளனர். ஒரே வீட்டில் இருவரும் தங்கினர். அதன்பின்னர்தான் நாக மல்லேஸ்வரியும் உண்மை முகம் பாஷாவுக்கு தெரியவந்தது. 

 மேலும் இருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரிந்ததால் பாஷா அந்தப்பெண்ணை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்.பாஷாவின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த நாக மல்லேஸ்வரி உல்லாச வாழ்க்கைக்கு இவர் இடையூறாக இருப்பதாக எண்ணியுள்ளார்.

 இதனையடுத்து பாஷாவை ஒழித்துக்கட்ட விரும்பி தனது எண்ணத்தை மற்ற கள்ள காதலர்களான அமரையா மற்றும் சுப்பாராவ் ஆகியோரிடம் கூறி அவர்களின் உதவியை நாடியுள்ளார். மூவரும் சேர்ந்து பாஷாவை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

கடந்த 3 ஆம் தேதி ரயில் நிலையத்துக்கு பின்னால் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு மது குடிக்க அழைத்து சென்றுள்ளனர். அங்கு பாஷாவுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளனர்.போதை அளவுக்கு அதிகமானதும் அவரது கழுத்தை நெறித்து இருவரும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

பாஷா இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் நாகமல்லேஸ்வரி தலைமறைவானார். 

இதனால் அவர் மீது போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. ஒருவழியாக நாகமல்லேஸ்வரியை கைது செய்த போலீஸார் தங்களது பாணியில் விசாரிக்க அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில் மற்ற கள்ளக்காதலர்களும் கைது செய்யப்பட்டனர்.