பெரம்பலுார் டூ நெல்லை; பெண்ணிற்கு தொடர்ந்து ஆபாச சாட்டிங் தொல்லை..!

Sexual harassment Tamil Nadu Police Tirunelveli
By Thahir Mar 25, 2023 04:41 AM GMT
Report

நெல்லை பெண் ஒருவருக்கு இளைஞர் தொடர்ந்து ஆபாச சாட்டிங் தொல்லை கொடுத்து வந்த நிலையில் போலீசார் இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து ஆபாச சாட்டிங் 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி பகுதியில் வசித்து வரும் பெண், திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெரம்பலுார் டூ நெல்லை; பெண்ணிற்கு தொடர்ந்து ஆபாச சாட்டிங் தொல்லை..! | Woman Molested On Whatsapp Perambalur

இந்த புகாரில், அடையாளம் தெரியாத மர்ம நபரின் வாட்சப் எண்ணில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி, வீடியோ கால் தொந்தரவு இருக்கிறது என்று கூறியுள்ளார்.  

தட்டித்துாக்கிய போலீசார் 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிடவே, இதன்பேரில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆபாச கால் பேசி தொந்தரவு செய்தவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடலூரை சேர்ந்த பாண்டுரங்கன் (வயது 30) என்பது உறுதியானது. இவரை பெரம்பலூர் சென்று நெல்லை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.