கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் - காரணத்தை பாருங்க..
இளம்பெண் ஒருவர் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்டார்.
சிலையுடன் திருமணம்
உத்தரப் பிரதேசம், பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கி ஷர்மா(28) என்ற இளம்பெண், தனது ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு பாரம்பரிய இந்து சடங்கின்படி கிருஷ்ணர் சிலையைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் திருமணம், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்க, ஒரு பிரமாண்டமான விழாவாக நடைபெற்றது. இவர் பிருந்தாவனில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலுக்குச் சென்றபோது, அங்கு அவருக்குப் பிரசாதமாக ஒரு தங்க மோதிரம் கிடைத்தது.
என்ன காரணம்?
இதைக் கிருஷ்ணரே தனக்கு மணமகளாக ஏற்றுக்கொண்டதற்கான அறிகுறி என்று பிங்கி கருதி தனது வாழ்நாள் முழுவதையும் கிருஷ்ணரின் வழிபாடு, தியானம் மற்றும் ஆன்மீக சேவைக்காக அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளார்.

பிங்கியின் மைத்துனர் இந்திரேஷ் ஷர்மா, கிருஷ்ணராக மணமகன் ஊர்வல சடங்கில் பங்கேற்றார். பிங்கியின் தந்தை சுரேஷ் சந்திர ஷர்மா முதலில் மகளின் முடிவைப் புரிந்துகொள்வதில் சிரமப்பட்டு,
பின் அவர் நம்பிக்கையை புரிந்துக்கொண்டு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். "நான் எப்போதும் கிருஷ்ணரின் அன்பில் மூழ்கியிருக்கவே விரும்புகிறேன்" என்று பிங்கி தெரிவித்துள்ளார்.