அழகிய பெண்ணோடு திருமணம்.. பூனைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. கடுப்பான 90’ஸ் கிட்ஸ்

By Petchi Avudaiappan Apr 27, 2022 05:06 PM GMT
Report

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் பூனையை திருமணம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தெபொரா எனும் 49 வயது பெண்மணி பூனைகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கணவர் இல்லாமல் தனது இரண்டு குழந்தைகளை வளர்த்து வரும் அவர்,  தன் குழந்தைகளைப் போலவே தான் வளர்க்கும் பூனைகள் மீதும் அதிக பாசம் கொண்டுள்ளார். 

ஆனால் அதே பூனைகளால் அவருக்கு ஏகப்பட்ட தொல்லைகள் ஏற்பட்டுள்ளது. காரணம் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வந்ததால் வீட்டு உரிமையாளர்களால் செல்லப்பிராணி வளர்க்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் வசித்த வீட்டின் உரிமையாளரால் ஆசையாக வளர்த்த இரண்டு பூனைகளை நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டார்.

ஆனாலும் பூனைகள் வளர்ப்பதில் தெபொராவுக்கு இருந்த ஆர்வம் குறையவில்லை. தற்சமயம் இந்தியா என்ற பெயரில் ஒரு பூனையை வளர்த்து வருகிறார். சமீபத்தில் இந்த பூனை கார் விபத்தில் சிக்கி காலில் காயமடைந்துள்ளது. அதனால் பூனையை வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடும்படி வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளதோடு அடிக்கடி அதனை அவர் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இம்முறை இந்தியாவை பிரிய மனமில்லாத தெபொரா முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது செல்லப்பிராணியாக இருந்தால்தானே வீட்டை விட்டு வெளியேற்றுவார்கள், அதனை குடும்பத்தில் ஒருவராக மாற்றிக் கொண்டால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என  நினைத்து இந்தியாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். 

மணமகன் போல அலங்கரிக்கப்பட்ட இந்தியாவோடு திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் அவர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இவை இணையத்தில் வைரலாகியுள்ளது. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதன் மூலம் எங்களை இனி யாரும் பிரிக்க முடியாது என கம்பீரமாக தெபொரா கூறியுள்ளார்.