அந்த ஒரு மீனை சாப்பிட்டதால் கை,கால்கள் மற்றும் கிட்டினை இழந்த பெண் - அதிர்ச்சி சம்பவம்!
சரியாக வேக வைக்காத திலாப்பியா மீனை சாப்பிட்டதால் பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளளார்.
பாக்டீரியா தொற்று
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் 40 வயதான லாரா பராஜாஸ். அந்த பெண் சரியாக வேக வைக்காத திலாப்பியா மீனை சாப்பிட்டுள்ளார். இதனால் அந்த மீனில் இருந்து அவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் அவருக்கு உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் பல மாதங்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு மிகவும் மோசமாக இருந்த நிலையில், அவரது விரல்கள் கருப்பாக மாறின. விரல்கள் மட்டுமின்றி, பாதங்கள் மற்றும் உதடும் கூட கருப்பாக மாறி இருக்கிறது. அவருக்கு அதீத நோய் எதிர்ப்பு தூண்டல் காரணமாக ஏற்படும் செப்சிஸ் ஏற்பட்டுள்ளது.
இரண்டு கிட்னிக்களும் செயலிழந்துள்ளன. மேலும் அவரது கை, கால்கள் அனைத்தும் செயலிழக்கத் தொடங்கியிருக்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமானதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உயிர் காக்கும் ஆப்ரேஷனும் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் எச்சரிக்கை
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் "அந்த பெண்ணுக்கு விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா பொதுவாக முறையாகச் சமைக்கப்படாத கடல் உணவுகளில் இருக்கும்.கடலில் இருக்கும் மிகக் கொடூரமான பாக்டீரியாக்களில் இதுவும் ஒன்றாகும்.
கடல் உணவுகளை நாம் ஏன் முறையாகச் சமைத்துச் சாப்பிட வேண்டும்.இல்லையென்றால் அது எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணமாகும். இந்த பாக்டீரியா இருக்கும் ஒரு மீன் அல்லது கடல் உயிரினங்களைச் சாப்பிட்டால் இந்த பாக்டீரியா நம் உடலுக்குள் புகுந்துவிடும்,
அல்லது இந்த பாக்டீரியா இருக்கும் நீர் நமது உடலில் இருக்கும் எதாவது காயத்தில் பட்டாலேயே அதன் வழியாக நமது உடலில் புகுந்துவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.