விபத்தில் நினைவிழந்த பெண்; கணவரை டாக்ஸி டிரைவர் என நினைத்து..துயர சம்பவம்!
விபத்தில் நினைவிழந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த துயர சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கனடா
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாஷ் பிள்ளை என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் ஜோகன்ஸ் என்வருக்கும் திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.அப்போது நாஷ் பிள்ளைக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நினைவிழந்த நாஷ் பிள்ளை தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நீண்ட சிகிச்சைக்குப் பின்னர் மீண்டார்.அப்போது தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.அதில், அவருக்குத் தனது கணவர் மற்றும் 6 வயதுக் குழந்தையை அவருக்கு நினைவு இல்லை என்று கூறியுள்ளார்.
துயர சம்பவம்
கணவர் ஜோகன்ஸ் நாஷ் பிள்ளையைச் சிகிச்சைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அது டாக்சி டிரைவர் என நினைத்து தனது கணவரை நம்பிக்கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார்.தொடர்ந்து அந்த வீடியோவில் பேசிய அவர்,’’ஒத்துழைப்பு இல்லாவிட்டால் தன்னால் குணம் அடைந்திருக்க முடியாது என்றுநாஷ் பிள்ளை கூறியுள்ளார்.
மேலும் மகளை அடையாளம் காண்பதில் அவர் சிரமப்பட்டதாகக் கூறிய அவர், தாய்மை உணர்வு தனக்கு ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.தொடர்ந்து நாஷ் பிள்ளைக்கு நரம்பியல் துறை நிபுணர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.