வளர்ப்பு நாய் நக்கியதால் கை கால்களை இழந்த பெண்
இந்திய பெண் ஒருவருக்கு அவருடைய வளர்ப்பு நாய் நக்கி அதனால் தொற்று வந்து தன்னுடைய கை கால்களை இழந்துள்ளார்.
'Sepsis' தொற்று
இந்தியாவை சேர்ந்த பெண் இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருடைய பெயர் மன்ஜீத் சங்கா இவருக்கு 52 வயதாகிறது.
இவர் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். கடந்த 2025 ஜூலை மாதம் இருக்கும் போது இவரது கையில் கத்தியால் வெட்டுப்பட்ட வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை பெரிதளவில் மன்ஜீத் கண்டுகொள்ளவில்லை.

அந்த காயத்துடன் இவர் அவரது செல்ல நாயும் விளையாடி உள்ளார். நாம் வளர்க்கும் நாயுடன் நாம் விளையாடும் போது அது நம்மை நக்கும். அப்படி நாய் தான் இந்த பெண்ணையும் அவரது செல்ல நாய் அவருக்கு ஏற்பட்ட காயத்தை நக்கி உள்ளது.
நாய் நக்கியவுடன் அவருக்கு அன்று உடல் நிலை சரி இல்லாமல் போனது என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு அடுத்த நாள் அவர் சுயநினைவின்றி கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த போது, அவருக்கு Sepsis எனப்படும் இரத்தத்தில் கடுமையான தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாயின் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் திறந்த காயம் வழியாக உடலுக்குள் நுழைந்து இந்த உயிருக்கு ஆபத்தான தொற்றை ஏற்படுத்தியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.