கோலிக்கு லிப் லாக் கொடுத்த ரசிகை... - வைரலாகும் வீடியோ... - ஷாக்கான ரசிகரகள்..!

Virat Kohli Viral Video
By Nandhini Feb 21, 2023 12:53 PM GMT
Report

கோலிக்கு லிப் லாக் கொடுத்த ரசிகையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

விராட் கோலி மாபெரும் சாதனை

இந்நிலையில், 164 நாட்களில் 1000 ரன்கள் குவித்து விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் செப்டம்பர் 8ம் தேதி 24000 ரன்களை எடுத்தார், இப்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 25000 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 5 மாதங்கள் மற்றும் 13 நாட்களில் 1000 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதனையடுத்து, 25,000 சர்வதேச ரன்களை எட்டிய 6து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

woman-kisses-virat-kohli-wax-statue

கோலிக்கு லிப் லாக் கொடுத்த ரசிகை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 2018ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை நிறுவப்பட்டது.

டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலைக்கு பெண் ஒருவர் முத்தமிட்டுள்ளார். ஒன்பது வினாடிகளுக்கு மேல் அப்பெண் விராட் கோலிக்கு லிப் லாக் கொடுத்துள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த விராட் கோலியின் ரசிகர்கள் அப்பெண்ணை விளாசி வருகின்றனர். இந்த வீடியோவை மட்டும் அனுஷ்கா பார்த்தார் என்றால், அப்பெண்ணின் உதடை பிளந்து விடுவார் என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.