அமைச்சர் ஜெயக்குமாரை கட்டியணைத்து முத்தமிட்ட பெண்: நெகிழ்ச்சி சம்பவம்
ராயபுரம் தொகுதியில் 7வது முறையாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை சந்திக்கிறார். ஏற்கனவே நடந்து முடிந்த ஆறு தேர்தலில் ஐந்து முறை அதே தொகுதியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் ராயபுரம் தொகுதியில் மக்களின் செல்லப்பிள்ளையாக எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அமைச்சர் ஜெயக்கமார் காலை தொடங்கி இரவு வரையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று பஜனை தெருவில் அவர் பிரச்சாரத்திற்காக வந்தார். அப்போது, அங்குள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெண்மணி அவர் அருகே வந்து அவர் கையை பிடித்து, “எங்க தெய்வம் நீதானய்யா நீதானய்யா... கொரோனா காலத்துல எல்லா உதவியும் செய்தீங்க... எங்கள காப்பாத்துன தெய்வம் நீ தான்.. நீ ஜெயிக்கணும்ய்யா,” என்று சொல்லி ஜெயக்குமாரின் கைகளை பற்றிக் கொண்டார்.

அருகில் இருந்த மாதா சிலையை தொட்டு வணங்கி வந்து ஜெயக்குமாரின் கன்னத்தை தடவி இந்த தாயோட முத்தம் இது என்று சொல்லி இரு கன்னத்திலும் முத்தமிட்டார். நீ இந்த மண்ணின் மைந்தன் ஜெயிக்கணும் என்று சத்தமாக கூறினார்.
உடனே அமைச்சர் ஜெயக்குமார் சரிம்மா... சரிம்மா... உங்க எல்லாரையும் நான் பத்திரமா பார்த்துக்கிறேன் என்று உருக்கமான குரலில் சொன்னார். இந்த சம்பவத்தால் அங்கு கூடியிருந்த அனைவரும் இந்த காட்சியை பார்த்து நெகிழ்ந்து போனார்கள்.