55 வயது மாமாவுடன் வாழ கணவனை கொன்ற 20 வயது இளம்பெண் - பகீர் பின்னணி
மாமாவை திருமணம் செய்ய இளம்பெண், கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமாவுடன் உறவு
பீகார், அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் குஞ்சா தேவி(20). இவரது கணவன் பிரியான்சு(25). திருமணமாகி 45 நாட்கள்தான் ஆகிறது. இந்தப் பெண் 55 வயதான தனது சொந்த மாமாவான ஜீவன் சிங்குடன் தகாத உறவில் இருந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கணவனை கொலை செய்துள்ளனர். தகவலறிந்த போலீஸார் குஞ்சா தேவி மற்றும் கொலை செய்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாகி உள்ள ஜீவன் சிங்கை தேடி வருகின்றனர்.
மனைவி வெறிச்செயல்
மேலும் விசாரணையில், திருமணத்திற்கு முன்பே ஜீவன் சிங் மற்றும் குஞ்சா தேவி தகாத உறவில் இருந்ததோடு, திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், பெண்ணின் பெற்றோர் அதை விரும்பாமல் கட்டாயப்படுத்தி, பிரியான்சுவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.
இதையடுத்து தனது கணவனை கொன்று விட்டு மீண்டும் தனது மாமாவுடன் சேர்ந்து வாழ குஞ்சா தேவி முடிவு செய்துள்ளார். அதன்படி, தனது தங்கை வீட்டிற்குச் சென்றுவிட்டு ரயிலில் பயணித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரியான்சு, நவிநகர் ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அப்போது மனைவியை தொடர்புகொண்டு தன்னை வீட்டிற்கு அழைத்து வர பைக்கில் யாரையேனும் அனுப்பும்படி கேட்டுள்ளார். பின் வீட்டை நோக்கி புறப்பட்ட பிரியான்சுவை, திடீரென இரண்டு பேர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.