கணவனின் உடலை அடைத்து உப்பு கொட்டிவிட்டு மாயமான மனைவி - காதலனுடன் கொடூரம்!
நபர், அழுகிய நிலையில் நீல நிற டிரம்மில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி சுனிதா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
ராஜஸ்தான், கிஷன்கர் பாஸ் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்த இவர், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆதர்ஷ் காலணியில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டு உரிமையாளர் மாடிக்கு சென்றதில் அங்கு இருந்த நீல நிற டிரம்மில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே அவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
மனைவி வெறிச்செயல்
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்ததில், டிரம்மில் அழுகிய நிலையில் ஹன்ஸ்ராஜின் சடலம் கிடந்துள்ளது. பின் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஹன்ஸ்ராஜின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தொடர் விசாரணையில், வீட்டு உரிமையாளர் மகன் ஜிதேந்திராவிற்கும் சுனிதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த கணவன் கண்டித்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, ஹன்ஸ்ராம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவருடன் அமர்ந்து ஜிதேந்திரா மது அருந்தி இருக்கிறார். அப்போது அவரை கழுத்தில் குத்தி கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் அடைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, இரண்டு பேரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
