கள்ளகாதலனுடன் உல்லாசம்.. கண்டித்த மகனை கொன்று அழுது கதறி நாடகமாடிய தாய்!

Karnataka Relationship Crime Murder
By Vidhya Senthil Nov 24, 2024 12:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

கள்ளக்காதலை மகன் கண்டித்ததால் தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா

கர்நாடக மாநிலம் விஜயநகரில் உள்ள ஹூவினகடஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நீலப்பா -அனுமந்தம்மா தம்பதியினர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் . இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து அனுமந்தம்மா தனது மகனுடன் வசித்து வந்தார்.

awoman killed her son for illegal relationship in karnataka

இந்த நிலையில் அனுமந்தம்மாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மல்லப்பா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது . இந்த பழக்கம் நட்பாக மாறி ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை அறிந்த அவரது மகன் தாயைக் கண்டித்துள்ளார்.

வீட்டில் கேட்ட அலறல் சத்தம் ..பெண் காவலரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கணவர் - பின்னணி என்ன?

வீட்டில் கேட்ட அலறல் சத்தம் ..பெண் காவலரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கணவர் - பின்னணி என்ன?

இதனையடுத்து தனது கள்ளக்காதலனிடம் மகனைக் கொலை செய்யும்படி கூறியுள்ளார்.இதற்காகக் கடந்த சனிக்கிழமை மல்லப்பா மற்றும் அவரது நண்பர் மஞ்சுநாத் ஆகியோர், சிறுவனைக் கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன்பிறகு தனது மகன் காணவில்லை என அனுமந்தம்மா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

கொலை 

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனுமந்தம்மா முன்னுக்கு முரணாகப் பதில் அளித்துள்ளார் . இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர் .

awoman killed her son for illegal relationship in karnataka

அப்போது தனது கள்ளக்காதலன் உள்பட 3 பேரைச் சேர்ந்து சிறுவனைக் கொன்றது நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அனுமந்தம்மா உள்ளிட்ட 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.