தன்னை விட அழகாக இருந்ததால் 4 குழந்தைகளை கொன்ற பெண் - தலைவிரித்தாடிய பொறாமை

Attempted Murder Crime Haryana
By Sumathi Dec 06, 2025 07:21 AM GMT
Report

4 குழந்தைகளை பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அழகால் பொறாமை 

ஹரியானா, பானிபட் அருகே நவுதலா கிராமத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில், 6 வயதான வித்தி என்ற சிறுமிஅங்கும் இங்குமாக ஓடியுள்ளார். அவர் திடீரென மாயமாகியுள்ளார்.

தன்னை விட அழகாக இருந்ததால் 4 குழந்தைகளை கொன்ற பெண் - தலைவிரித்தாடிய பொறாமை | Woman Killed 4 Kids For Beauty Haryana

தொடர்ந்து முதல் தளத்தில் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டிருந்த அறையை திறந்து பார்த்துள்ளனர். அங்கிருந்த தண்ணீர் வாளிக்குள் முகத்தை விட்டபடி சிறுமி வித்தி, கிடந்துள்ளார். உடனே அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறுமி கடைசியாக உறவுக்கார பெண்ணான பூனம் என்பவருடன் சென்றது தெரியவந்தது.

தகாத உறவு - மனைவியைக் கொடூரமாக கொன்று செல்பி எடுத்த கணவர்!

தகாத உறவு - மனைவியைக் கொடூரமாக கொன்று செல்பி எடுத்த கணவர்!

4 குழந்தைகள் கொலை

இதையடுத்து, அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில், 2019 ஆம் ஆண்டு திருமணமானது. 2 குழந்தைகளுக்கு தாயான பின்னரும், தன்னை ஒரு பேரழகியாக நினைத்துக் கொண்டுள்ளார். எனவே பொறாமையில் கல்யாண வீட்டில் சிறுமியை கொன்றுள்ளார்.

தன்னை விட அழகாக இருந்ததால் 4 குழந்தைகளை கொன்ற பெண் - தலைவிரித்தாடிய பொறாமை | Woman Killed 4 Kids For Beauty Haryana

மேலும், தன்னைவிட அழகாக இருப்பதாக நினைத்து, மைத்துனியின் 9 வயது மகள் இஷிகாவை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். அதை பார்த்த தனது 4 வயது மகனையும் அதேபோன்று கொலை செய்துள்ளார். 6 வயதான உறவுக்கார சிறுமியும் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால், அவர்கள் அனைவரும் எதிர்பாராத விபத்தில் உயிழந்ததாக உறவினர்கள் நினைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.