போதை மருந்து கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் : அரசியல் பிரமுகர் மகன் அதிரடி கைது
இளம்பெண்ணை கடத்தி போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் கோடாட்டில் 20 வயது பெண், தனது தாயுடன் வசித்து வருகிறார்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பிரமுகரும், வார்டு கவுன்சிலர் பாஷாவின் மகன் கவுஸ் மற்றும் அவரது நண்பர் சாய்ராம் ரெட்டியால் கடத்தப்பட்டார்.
அந்த பெண் சென்றுக்கொண்டிருக்கையில் ஆட்டோ ரிக்ஷாவில் அவரை கடத்திச் சென்ற குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அப்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அடைத்து வைத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சுயநினைவு பெற்று, கடத்தியவர்களிடமிருந்து தப்பித்து தனக்கு நேர்ந்த கொடுமையை அழுதபடியே தனது தாயிடம் கூறியிருக்கிறார்.
மகளுக்கு நடந்த கொடுமை குறித்து தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், குற்றவாளிகள் இருவர் மீதும் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

IQ Test: உங்க அறிவை சோதிக்கும் புதிர்.. யாருடைய பெற்றோர்கள் பணக்காரர்கள்? 5 வினாடிகளில் கண்டுபிடிங்க Manithan

மீண்டும் குமாருவுடன் சேட்டை செய்யும் அரசி.. அந்த பொண்ணு யாரு? ஒரு கேள்விக்கே திணறும் காட்சி Manithan
