நேரலையில் சிறுவனின் கன்னத்தில் பளாரென அறைந்த பெண் பத்திரிகையாளர் - வைரலாகும் வீடியோ

Viral Video Pakistan
By Nandhini Jul 14, 2022 06:30 AM GMT
Report

வைரலாகும் வீடியோ

இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் தொடர்பான செய்தியை கேமரா முன்பு நின்று நேரலையாக பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டமே நின்றுக்கொண்டிருந்தது. அந்த கூட்ட மத்தியில் அந்த பெண் நிருபர் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் அருகில் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த அப்பெண் கேமரா முன்பு பேசிக்கொண்டிருந்தபோதே அச்சிறுவனின் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைந்தார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், இப்பெண்ணின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.     

beating - viral video