‘நாய்’ என திட்டியதால் தற்கொலை செய்த பெண் - ரூ.90 கோடி இழப்பீடு!

Japan Death
By Sumathi Sep 16, 2025 09:48 AM GMT
Report

நாய் என திட்டியதால் பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தற்கொலை  

ஜப்பான், டோக்கியோவை சேர்ந்த டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி (25) என்ற இளம் பெண், கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார்.

‘நாய்’ என திட்டியதால் தற்கொலை செய்த பெண் - ரூ.90 கோடி இழப்பீடு! | Woman Japan 25 Died By Suicide Verbal Abuse

இவர் முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக அவரை, நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய் விசாரணைக்கு அழைத்து, நாய் என திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த சடோமி, தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்ற இவர், 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். பின் தங்கள் மகளின் இந்த நிலைக்கு காரணம் அவர் வேலை பார்த்த நிறுவனமும், அதன் தலைவர் மிட்சுரு சகாயும்தான் என்று பெற்றோர் புகாரளித்தனர்.

விடுப்பு கோரிய 10 நிமிடம்தான் - ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு!

விடுப்பு கோரிய 10 நிமிடம்தான் - ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு!

பெண் தற்கொலை

இந்த வழக்கை விசாரித்து வந்த டோக்கியோ மாவட்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சடோமியின் குடும்பத்துக்கு ஜப்பான் நாட்டு பணமான 150 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.90 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அழகு சாதன உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

[

மேலும் அதன் தலைவரான மிட்சுரு சகாய், தனது பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து அவருக்கான இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் மிட்சுரு சகாயும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.