7 வருட காதல்; காதலன் செய்த செயல் - உறுப்பை துண்டித்த காதலி
காதலனின் பிறப்புறுப்பை இளம்பெண் கத்தியால் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலன் மறுப்பு
மும்பை சாண்டாக்ரூஸ் கிழக்கு, கலினா பகுதியைச் சேர்ந்த 25 வயதுப் பெண்ணுக்கும், 42 வயது நபருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது.

அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அந்த நபர் திருமணத்திற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகத் தனது வீட்டிற்கு வருமாறு காதலனுக்கு அந்தப் பெண் அழைப்பு விடுத்துள்ளார்.
இளம்பெண் கொடூரம்
விருந்து முடிந்து இருவருக்கும் இடையே மீண்டும் திருமணப் பேச்சு எழுந்துள்ளது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அந்தப் பெண், மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் பிறப்புறுப்பை அறுத்துள்ளார்.
படுகாயமடைந்த அந்த நபர், ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து தப்பித்துத் தனது சகோதரருக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.