வழிப்பறி புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் - தொடர் அராஜகத்தால் டிஸ்மிஸ்

Crime Pudukkottai
By Sumathi Apr 14, 2023 05:15 AM GMT
Report

வழிப்பறி வழக்கில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வழிப்பறி

புதுக்கோட்டை பகுதியில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் வசந்தி. இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் எனும் பேக் தயாரிக்கும் தொழில் புரியும் நபர், தனது வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க ரூ.10 லட்சம் பணத்துடன் மதுரைக்கு வந்துள்ளார்.

வழிப்பறி புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் - தொடர் அராஜகத்தால் டிஸ்மிஸ் | Woman Inspector Dismiss For Robbery Pudukottai

அப்போது நாகமலை பகுதியில் நண்பர் ஒருவரை பார்க்க சென்றுள்ளார். அந்த சமயத்தில், வசந்தி தனக்கு தெரிந்த பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து, அர்ஷத்தை மிரட்டி அவரிடம் இருந்த 10 லட்ச ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துள்ளார்.

 பணி நீக்கம் 

அதனை அவர் காவல்நிலையம் சென்று திரும்ப கேட்டபோது பொய் வழக்கு போட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், அர்ஷத் புகாரளித்த நிலையில் வசந்தி தலைமறைவானார். அதன்பின் தனிப்படை அமைத்து தேடி கைது செய்யப்பட்டார்.

அதன்பின் ஜாமீனில் வெளிவந்தவர் மீண்டும் புகார் கொடுத்தவரை மிரட்டியதால் பணிநீக்கம் செய்வதாக மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.