ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக் கொலை - பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
சொத்து தகராறு காரணமாக ஓடும் பேருந்தில் தம்பி மனைவியை அண்ணன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறு
திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபிநாதன் இவரது மனைவி தமயந்தி.
கோபிநாதனுக்கும் அவரது அண்ணன் ராஜங்கத்துக்கும் இடையே நீண்ட காலமாக பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினை இழுபறியில் இருந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் இப்போதைக்கு சொத்துப் பிரச்சினையில் தீர்வு காண வாய்ப்பில்லை என்ற வருத்தத்தில் இருந்துள்ளார் ராஜாங்கம்.
சொத்துப் பிரச்சினைக்கு காரணம் என்று தம்பியின் மனைவி தமயந்தி மீது அவர் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே தமயந்தி சென்னையிலிருந்து திண்டுக்கல் திண்டுக்கல் சென்று அங்கிருந்து மாற்று பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது தனக்கு பின் சீட்டில் ராஜாங்கம் அமர்ந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ராஜாங்கம் தனது 13 வயது மகனுடன் இருந்ததில் மகனை வைத்துக்கொண்டு தனிப்பட்ட பகையை காட்ட மாட்டார் என்ற நம்பிக்கையில் பேருந்தில் பயணித்துள்ளார்.
ஓடும் பேருந்தில் வெட்டிக் கொலை
பின்னர் பேருந்து கோபால்பட்டி நிறுத்ததில் நின்ற போது பேருந்திலிருந்து இறங்குவது போல நடித்த ராஜாங்கம், எவரும் எதிர்பாரா தருணத்தில் மறைத்து வைத்திருந்த அறிவாளால் தமயந்தியின் தலையை துண்டாக வெட்டி கொன்றார்.
இதனால் பேருந்தே ரத்தகளமாக மாறியது. இதை பார்த்த சக பயணிகள் அலறி அடித்து தெறித்து ஓடினர்.அந்த இடைவெளியில் ராஜாங்கம் ஓடி மறைந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் பேருந்தில் ராஜாங்கத்துடன் பயணித்த அவரது மகனை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது கொலையானது எனது சித்தி தமயந்தி, கொன்றது எனது தந்தை ராஜாங்கம் என விளக்கி இருக்கிறான்.
அதன் அடிப்படையில் தப்பியோடிய ராஜாங்கத்தை சாணார்பட்டி போலீசார் வளைத்து கைது செய்துள்ளனர்.