பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிறந்த 10 நாட்களேயான குழந்தை - சுவாரஸ்ய சம்பவம்!
பிறந்து 10 நாட்களேயான தனது குழந்தையுடன் பெண் ஒருவர் பட்டம் பெற்ற சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டமளிப்பு விழா
அமெரிக்காவில் உள்ள ஃபெர்ரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படித்து வருபவர் கிரேஸ். இந்த டிப்ளமோ கல்வி தனது வாழ்க்கையில் மிக முக்கியமானதாக அவர் கருதினார்.
திருமணமான பின்னரும் தனது கல்வியை தொடர்ந்த கிரேஸும், அவரது கணவரும் தங்களின் முதல் குழந்தையை வரவேற்க காத்திருந்தனர். இதனால் டிசம்பர் 15ம் தேதி பட்டமளிப்பு விழாவும், டிசம்பர் 18ம் தேதி குழந்தையின் வருகையும் கிரேஸை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக குழந்தை டிசம்பர் 6ம் தேதியே பிறந்தது. அறுவை சிகிச்சை, அதன் பிறகான மருத்துவனை ஓய்வு ஆகியவற்றிற்கு பிறகு பட்டமளிப்பு விழாவிற்கு செல்வது உகந்ததல்ல என பலரும் வலியுறுத்தினர்.
பிறந்த குழந்தை
ஆனால் தனது கடின முயற்சியில் படித்து நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்குவதே சிறந்ததாக இருக்கும் என்பதில் கிரேஸ் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் பிறந்து 10 நாட்களே ஆன தனது குழந்தையுடன் பட்டமளிப்பு விழாவிற்கு வந்து பட்டத்தை வாங்கினார். இதுகுறித்து கிரேஸ் கூறியதாவது "டிசம்பர் 6 ஆம் தேதி முன்கூட்டியே உலகத்தை பார்க்கலாம் என அன்னாபெல் முடிவு செய்துவிட்டாள்.
அதே நேரத்தில் இந்தப் பட்டத்திற்காக நான் மிக கடினமாக உழைத்தேன், மேலும் எனது வகுப்பில் உள்ள சக மாணவர்களுடன் சேர்ந்து இந்த பட்டம் பெறும் நிகழ்வு நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் அவளை என்னுடன் பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்து வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.