தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிய கொடூர தாய்!

By Swetha Subash May 27, 2022 06:07 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு பிறந்த பச்சிளம் குழந்தையை தாயே முட்புதரில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மான்பூண்டி ஆற்றின் முட்புதரில் குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டு, அவ்வழியாக சென்றவர்கள் கவனித்து அங்கு சென்று பார்த்தபோது பச்சிளம் பெண் குழந்தை அழுதுகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே குழந்தையை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை அடுத்து அங்கு பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிய கொடூர தாய்! | Woman Gives Birth To Baby Girl Leaves Abandoned

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் குழந்தையை வீசிச் சென்ற தாய் யார் என விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் உடலில் காயங்க மற்றும் ரத்தக்கறையுடன் ஒரு கோவில் அருகே பெண் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகின்றது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கல் வெளிவந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில்,  “காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தான் முட்புதரிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த பெண் மணப்பாறை அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த 38 வயதுடைய சசிகலா, அவருக்கு ஏற்கனவே 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இவரது கணவன் இறந்து விட்ட நிலையில் திருப்பூரில் தனியாக வசித்து வந்துள்ளார்.

தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிய கொடூர தாய்! | Woman Gives Birth To Baby Girl Leaves Abandoned

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அவர் முட்புதரில் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்டு அருகில் உள்ள கோவில் வளாகத்திற்கு சென்று படுத்துக் கொண்டது தெரியவந்தது. 

தாய்-சேய் இருவருக்கும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என தெரிவித்தனர்.