ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த 25 வயது பெண் - வைரலாகும் வீடியோ!
ஓடும் ரயிலிலேயே பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரயிலில் பிரசவம்
புளோரிடாவைச் சேர்ந்த 25 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர், மன்ஹாட்டனில் தெற்கு நோக்கிச் செல்லும் டபிள்யூ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு தரையில் விழுந்திருக்கிறார்.
உடனடியாக மருத்துவ பணியாளர்கள் யாரும் கிடைக்காத நிலையில், அருகில் இருந்தவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து, குழந்தையை பெற்றெடுக்க உதவினர்.
வீடியோ வைரல்
தொடர்ந்து ரயில் போக்குவரத்து சேவையின் மேற்பார்வையாளர், நடத்துனர் மற்றும் பல நியூயார்க் காவல் அதிகாரிகள் அந்தப் பெண்ணையும், அவரது குழந்தையையும் பெல்லூவ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதிக்கப்பட்டு இருவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாழ்நாள் முழுவதும் நம்பகமான மற்றும் குறைவான வியத்தகு பயணங்களுக்கு இருவரையும் மீண்டும் வரவேற்பதற்கு நாங்கள் மிகுந்த ஆவலோடு இருக்கிறோம் என்று
நியூயார்க் போக்குவரத்துத் தலைவர் டெமெட்ரியஸ் கிரிச்லோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தையை பயணிகள் கையில் வைத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.