நள்ளிரவில் வீட்டுக்கு வந்த பார்சல்.. உள்ளே கிடந்த சடலம்- பெண்ணுக்கு காதிருந்த அதிர்ச்சி!
பெண்ணுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்சல்..
ஆந்திரா மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி. இவர் அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்டுவதற்காக, சத்ரிய அறக்கட்டளையில் நிதி உதவி பெற்று வந்துள்ளார். அதில் வீடுக்கட்ட தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் துளசி அதில் டைல்ஸ் மற்றும் மின்சாதனப் பொருட்களை கேட்டதையடுத்து விரைவில் அனுப்பி வைக்கப்படும் என அறக்கட்டளை தரப்பில் கூறப்பட்டது. இந்த பொருட்கள் வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த துளசிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது நாள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்த பார்சலை திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் பாதி ஆண் சடலம் இருந்தது. அத்துடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில், “ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் பணம் தராவிட்டால் கொன்றுவிடுவோம்” என கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அலறி அடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் நாகதுளசி புகார் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலம்
அது போல் பார்சல் கொண்டு வந்த நபரையும் அடையாளம் காணும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த சடலம் குறித்த முதல் கட்ட விசாரணையில் அந்த நபர் இறந்து 4 முதல் 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நாகதுளசியின் கணவர் காணாமல் போய்விட்டார். அவர் வாங்கிய 3 லட்சம் கடனை வட்டியுடன் கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மிரட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இறந்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த பார்சல் எங்கிருந்து வந்தது, அதை கொண்டு வந்து கொடுத்த நபர் யார் என்பதை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.