செலவில்லாமல் ரூ. 22 லட்சத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பெண்; சின்ன ட்ரிக் தான்! எப்படி தெரியுமா?
ஓராண்டாக செலவு செய்யாமல் பெண் ஒருவர் ரூ. 22 லட்சத்திற்கு பெட்ரோல் நிரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 22 லட்சம் பெட்ரோல்
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தை சேர்ந்த டான் தாம்சன் என்ற பெண் வழக்கமாக எரிபொருட்களை நிரப்ப சென்றுள்ளார். ஒரு நாள், பெட்ரோல் வாங்கும்போது தனது கிரெடிட் கார்டை தவறுதலாக 2 முறை ஸ்வைப் செய்திருக்கிறார்.
அப்போது சாஃப்ட்வேரில் கிரெடிட் கார்டை ஒரே நேரத்தில் 2 முறை ஸ்வைப் செய்தால், அது டெமோ பெட்ரோல் என்றும், அதற்கு பணம் எடுக்கப்படாது என்றும் செட்டிங்ஸ் செய்து வைக்கப்பட்டுள்ளது.
எப்படி தெரியுமா?
இதனை அறிந்த தாம்சன் அந்த நிறுவனத்தின் சாஃப்ட்வேர் கோளாறை பயன்படுத்தி, ஒரே ஆண்டில் சுமார் 510 முறை தனது வாகனங்களில் பெட்ரோல் டேங்கை ஃபுல் செய்திருக்கிறார்.
ஓராண்டுக்கு பின்னர் பெட்ரோல் பங்க்கின் கணக்கு வழக்குகளில் முரண்பாடு ஏற்பட்டிருப்பதை அதன் உரிமையாளர்கள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து சாஃப்ட்வேர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தாம்சன் எரிபொருட்களை அடிக்கடி நிரப்பியது தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஒரு வருடமாக டான் தாம்சன் ரிவார்டு கார்டை 510 முறை பயன்படுத்தியதற்கான ஆதாரம் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டு, அவருடன், டெமோவை ஆக்டிவேட் செய்ய உதவிய நபரும் சிக்கியுள்ளனர்.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தாம்சன் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.