கோவிலில் பெண்ணுடன் தனியறையில் இருந்த பூசாரி - அடித்து விரட்டிய பொதுமக்கள்

Rajastan temple priest found with woman
By Petchi Avudaiappan Aug 06, 2021 11:50 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

ராஜஸ்தானில் கோவிலில் பெண்ணுடன் பூசாரி ஒருவர் தனிமையில் இருந்ததாக கூறி பொதுமக்கள் அவர்களை அடித்து விரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள கங்கராரில் உள்ள சர்னேஷ்வர் மகாதேவ் கோவிலில் பூசாரியாக இருப்பவர் பெண் ஒருவருடன் தனியறையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த ஊர்மக்கள் இருவரையும் வெளியே இழுத்து செருப்பால் அடித்து சராமாரியாக தாக்கி உள்ளனர்.

பூசாரியுடன் இருந்த பெண்ணின் ஆடைகளை கிழித்தும் அவரை கீழே தள்ளியும் தாக்கி உள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரசாத் கோயலிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் என்னுடைய நற்பெயரை கலங்கப்படுத்த என்னை தாக்கியும், ஆடையை கிழித்தும் அவமானப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பூசாரி குடும்பத்தினருடன் நல்ல நட்பு உறவை கொண்டுள்ள நாங்கள் சம்பவத்தன்று கோவிலில் பூசாரி மனைவி வருவதற்காக தான் காத்திருந்தோம்.ஆனால் சிலர் எங்களை தவறாக புரிந்து கொண்டு தாக்கி அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் என அப்பெண் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபடுவேன் என்றும் கூறியுள்ளது ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.