4 வருஷமா வெளியே வராத இளம்பெண் - கதவை உடைச்சதும் காத்திருந்த அதிர்ச்சி!
இளம் பெண் வீட்டை உடைத்து பார்த்ததில் உறவினர்களுக்கு திடுக்கிட வைக்கும் விஷயம் ஒன்று காத்திருந்தது.
திறக்கப்படாத வீடு
கனடா, சர்ரே என்னும் பகுதியில் ஏழைகளுக்காக அரசு ஒதுக்கியுள்ள வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார் லாரா என்ற பெண். இவர் சிறு வயது முதலே நோய் வாய்ப்பட்டு இருந்ததால் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் யாரிடமும் இருக்காமல் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக லாராவின் தந்தை இறந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது பற்றி, லாராவிடம் தெரிவிப்பதற்காக அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சுமார் 4 வருடங்கள் கழித்து உறவினர்கள் சென்றுள்ளனர். அங்கே கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், கடிதம் போடும் இடைவெளி வழியாக உறவினர் எட்டிப் பார்க்க, அங்கே கால் ஒன்று தெரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
காத்திருந்த அதிர்ச்சி
போலீசார், வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. லாரா உயிரிழந்தபடி, உடல் காய்ந்து சுருங்கி போயிருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக தன்னுடைய காலண்டரில், 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் "உதவி தேவை" என்றும் லாரா எழுதி வைத்துள்ளார்.
சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பலரையும் ஒரு நிமிடம் பீதியில் ஆழ்த்தி இருந்தது. தனியாக வாழ்ந்து வந்த பெண்ணை இத்தனை நாட்கள் எட்டி கூட பார்க்காமல் இருந்தது பற்றியும், சமூக சேவகர்கள் மற்றும் பராமரிப்பு குறித்தும் புகாரில் குறிப்பிட்டுள்ள நிலையில்,
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும் என்றும் லாராவின் உறவினர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.