வாரணாசியில் பிச்சையெடுக்கும் பிஎஸ்சி பட்டதாரி பெண் - வைரலாகும் வீடியோ
பிஎஸ்சி படித்தும் வாரணாசியில் பெண் ஒருவர் பிச்சையெடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக யாசகம் எடுத்து வாழ்க்கை நடந்தும் மனிதர்களை நாம் பிச்சைக்காரர்களாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக பார்த்து கடந்து விடுவோம். அவர்களின் கடந்தகாலம் நமக்கு தெரியாது. நிச்சயம் அவர்கள் அனைவரும் ஒருகாலத்தில் நல்ல முறையில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து விதியின் பயனால் இப்படியான இடத்தில் வந்து நிற்கிறார்கள்.
அந்த வகையில் வாரணாசி வீதிகளில் யாசகம் கேட்கும் ஸ்வாதி அந்த பெண் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. திருமணமாகி நல்ல நிலையில் இருந்த அவரின் வாழ்க்கை குழந்தை பிறந்ததும் திசை மாறியது.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரது உடலில் வலதுபக்கம் செயலிழந்து விட்டது
இதனால் குடும்பத்தினரால் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டு எங்கெங்கோ சுற்றி கடைசியாக வாரணாசி வந்து சேர்ந்துள்ளார். யூடியூப்பர் ஒருவரிடம் தன்னைப்பற்றி தெரிவித்துள்ள அவர் கடந்த 3 வருடங்களாக அங்கு இருப்பதாகவும், யாரேனும் வேலை கொடுத்தால் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.