தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் - சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு!

Thailand Death
By Sumathi Nov 25, 2025 05:25 PM GMT
Report

சவப்பெட்டியில் பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெண் மீட்பு

தாய்லாந்து, பிட்சானுலோக் மாகாணத்தை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் இரண்டு நாட்களுக்கு முன் மூச்சு நிற்பதை கண்ட அவரது சகோதரர்,

thailand

அவரை இறந்துவிட்டதாக கருதி சவப்பெட்டியில் வைத்து தகனத்திற்காகக் கொண்டு வந்தார். முன்னதாக, உறுப்பு தானத்திற்காக மருத்துவமனைக்கு முதலில் சென்றபோது, இறப்பு சான்றிதழ் இல்லாததால் அது நிராகரிக்கப்பட்டது.

10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெடித்த எரிமலை - இந்தியாவை சூழ்ந்த இருள்!

10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெடித்த எரிமலை - இந்தியாவை சூழ்ந்த இருள்!

ஷாக் சம்பவம்

தொடர்ந்து கோயிலில் தகன ஆவணங்கள் குறித்து சகோதரருக்கு விளக்கமளித்து கொண்டிருந்தபோது, சவப்பெட்டியிலிருந்து சத்தம் கேட்டது. உடனே ஊழியர்கள் திறந்து பார்த்தபோது, அந்த பெண் லேசாக கண்களைத் திறந்து, கை, கால்களை அசைக்க தொடங்கியுள்ளார்.

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் - சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! | Woman Found Alive In Coffin Thailand

பின் அப்பெண் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரது மருத்துவ செலவுகளை கோயில் நிர்வாகம் ஏற்று கொள்வதாகவும் அறிவித்துள்ளது.