Friday, Jul 25, 2025

சம்பள விவரத்தை வெளியே சொன்ன பெண்! வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்!

United States of America Viral Photos
By Irumporai 3 years ago
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது சம்பள விவரத்தை வெளிப்படையாக சொன்னதால் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டென்வரைச் சேர்ந்த லெக்ஸி லார்சன் என்ற பெண் கடந்த மாதம் தான் முன்பு வேலைப் பார்த்த அக்கவுண்டிங் பணியில் இருந்து டெக்னிக்கல் சார்ந்த பணிக்கு மாறினார்.

சம்பள உயர்வு

அப்போது தனது வருமானம் 70 ஆயிரம் டாலரில் இருந்து 90 ஆயிரம் டாலர் வரை உயர்ந்ததை வெளிப்படுத்தும் வகையில் ஒன்றை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.  

சம்பள விவரத்தை வெளியே சொன்ன பெண்! வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்! | Woman Fired For Making Tiktok Explain

இந்த வீடியோவை அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் பார்த்ததால் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாக லெக்ஸி லார்சன் கூறியுள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை, அங்கு அமலில் உள்ள தேசிய தொழிலாளர் உறவுகள் சட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் தங்கள் சம்பள விவரம் குறித்து பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.

வீடியோவால் பதவி போன பறிதாபம்

குறிப்பாக சம்பளம் தொடர்பான விவாதத்தை தடை செய்யும் கொள்கைகள் சட்டவிரோதமானது என்று தொழிலாளர் குழுக்கள் கூறி வருகிறது. 

இந்த விவகாரம் அமெரிக்காவில் பணிபுரியும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது