பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பிய நபருக்கு போலிஸ் வலைவீச்சு
பெண்ணின் செல்போனுக்கு நபர் ஒருவர் அந்தரங்க வீடியோ அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பயந்தர் மேற்கு பகுதியில் 37 வயதான பெண் ஒருவர், தனது கணவர், மகள், மகன் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார்.
அவரது வாட்ஸ்அப்பில் தவறான குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகள் வந்ததையடுத்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், ஆன்லைன் படிப்புக்கு செல்போன் பயன்படுத்திய தனது மகளுக்கு வாட்ஸ்அப்பில் “ஹாய்” வந்ததாகவும், அதற்கு “ஹலோ யார் இது” என்று பதிலளித்ததாகவும்,
அப்போது, "ஐ மிஸ் யூ" என்ற மற்றொரு செய்தி அவருக்கு வந்தது. மகள் தன்னிடம் செய்தியைக் காட்டும்போது வீடியோ கால் வந்ததாகவும்.
அதில் அந்த நபர் கேமரா முன் தனது அந்தரங்க உறுப்பை காட்டி, பின்னர் ஆபாச வீடியோவையும் அனுப்பியதாக அந்த பெண் புகாரில் கூறியதாக பயந்தர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த நபரின் ஃபோன் கால்கள் மற்றும் குறுஞ்செய்திகளை ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து காவல்துறையை அணுகி அடையாளம் தெரியாத நபர் மீது புகார் கூறியுள்ளார் அந்த பெண்.
இந்நிலையில் போலிசார் ஐபிசியின் பிரிவு 354-A(i),(iii)ஐடி சட்டத்தின் பிரிவு 67 மற்றும் 67 (a)ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.