தடுப்பூசி போட்ட இளம்பெண்..அடுத்த சில நொடியில் ஏற்பட்ட ஆபத்து - என்ன காரணம்?
தடுப்பூசி போட்ட இளம்பெண்ணின் உடல்நிலை மிக மோசமாகப் பாதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசி
அமெரிக்கா, கலிபோர்னியாவின் ஆரஞ்ச் என்ற ஒரு பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனையில் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசி போட்ட கொஞ்ச நாட்களிலேயே அந்த 23 வயதான பெண்ணுக்குக் கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த பெண்ணுக்கு மாதம் Paroxysmal Nocturnal Hemoglobinuria (PNH) என்ற நோய்ப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அலெக்சிஸ் லோரன்ஸ் (23) என்ற அவர் அங்குள்ள மருத்துவ மையத்தில் டெட்டனஸ், நிமோகாக்கல் மற்றும் மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளைப் போட்டுள்ளார். அடுத்த 10வது நிமிடத்திலேயே அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது.
குறிப்பாகத் தற்காலிக கண் பார்வை இழப்பு, வாயை அசைக்க முடியாமல் போனது, வாந்தி உள்ளிட்ட ஆபத்தான அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அலெக்சிஸ் லோரென்ஸுக்கு மருத்துவ காப்பீடு இல்லை.
ஆபத்து
என்பதால் அவ்வளவு பாதிபிலும் அவசரமாக வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றபட்டார். மருத்துவத்திற்கு பணத்தை கொஞ்ச கொஞ்சமாக திரட்டி அவருக்கான சிகிச்சை நடந்தது. இது தொடர்பாக அண்மையில், அவர் பதிவிட்டப்போது,
வீங்கிய கண்கள் மற்றும் நெற்றியில் உட்பட முகம் முழுக்க கருப்பு-ஊதா நிற சிராய்ப்புகள், வீக்கம் ஆகியவை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி எந்தளவுக்குத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது தொடர்பான வீடியோவை பதிவிடார்.
தடுப்பூசி போட்ட கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு ரத்தக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் ரத்த மாற்றுச் சிகிச்சை செய்தும் பாதிப்புகள் முழுமையாகச் சரியாகவில்லை.
பூரண குணமடையத் தொடர் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லெக்சிஸ் லோரென்ஸுக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்கு காரணமான நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியுள்ளார்.