பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த பெண்; நூலிழையில்..நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சிகள்!

Coimbatore
By Sumathi Jun 18, 2024 08:30 AM GMT
Report

பெண் ஒருவர் பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி அலட்சியம்

கோவை, முக்கிய சாலைகளில் ஒன்று காந்திபுரம் 100 அடி சாலை. இங்கு இரு புறங்களிலும் வணிக நிறுவனங்கள் உள்ளன. அதற்கு முன்பாகவே இரு புறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.

coimbatore

இந்நிலையில், அங்கு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டு பிறகு ஆங்காங்கே இருந்த பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே இருந்துள்ளது.

அடிபம்புடன் சேர்த்து போடப்பட்ட விநோத தார் சாலை - டென்ஷன் ஆன பொதுமக்கள்

அடிபம்புடன் சேர்த்து போடப்பட்ட விநோத தார் சாலை - டென்ஷன் ஆன பொதுமக்கள்

அதிர்ச்சி வீடியோ

இது குறித்து பொதுமக்களும் வணிக நிறுவன உரிமையாளர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

இதற்கிடையில், அவ்வழியே நடந்த சென்ற இளம் பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் விழுந்துள்ளார்.

இதனால் காலில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, அப்பெண் சாக்கடை குழிக்குள் விழும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.