திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த பெண் - அதிர்ச்சி சம்பவம் !
ஆபாச வீடியோ அனுப்பி தேனி திமுக எம்.எல்.ஏ விடம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பணம் பறிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ சரவணகுமார் செல்போனுக்கு சில நாட்களுக்கு முன் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. இவர் அழைப்பை அட்டென்ட் செய்தபோது எதிரில் இருப்பவர்கள் ஏதும் பேசாமல் இருந்துள்ளனர்.
அதன் பிறகு சில மணி நேரம் கழித்து அவர் செல்போனுக்கு வீடியோ பதிவு ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோ பதிவில் சரவணகுமார் பெண் ஒருவரிடம் கொச்சையாக பேசுவது போல் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
அதன் பின் சரவணகுமார் செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஒரு நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த ஆபாச விடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பரப்பி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த நபர் வங்கி கணக்கிற்கு ரூ.10000 பணத்தை அனுப்பியுள்ளார் சரவணகுமார்.
போலீசார் விசாரணை
இந்நிலையில் இதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் பணம் செலுத்திய வங்கி கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றைக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர் தரப்பில் பேசியது பெண்ணா அல்லது வேறு யாராவதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.