திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை விட்டுவிட்டு.. அத்தானுடன் ஓட்டம் பிடித்த பெண்!
திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு, பெண் ஒருவர் அக்கா கணவருடன் சென்றுள்ளார்.
தகாத உறவு
கோவை, கணியூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(40). இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவரது மனைவி 7 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், சந்திரனின் மனைவி 32 வயதான தனது தங்கைக்கு, மாப்பிள்ளை பார்த்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஓட்டம் பிடித்த பெண்
தொடர்ந்து, திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். பின் போலீஸில் புகாரளித்ததில், சந்திரனும் புதுப்பெண்ணும் ஒரே இடத்தில் இருப்பது உறுதியானது.

இதனையடுத்து 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது, புதுப்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே தனது அக்காள் கணவரான சந்திரன் உடன் பழக்கம் இருந்தது. அதனால் புகுந்தவீட்டை விட்டு 2 பேரும் வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது.