மது அருந்திவிட்டு மட்டையான இளம்பெண்; அழுகிய கால்கள் - பகீர் பின்னணி!

Canada
By Sumathi Mar 29, 2023 10:20 AM GMT
Report

மது அருந்திய பெண்ணிற்கு கால்கள் அழுகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுவுக்கு அடிமை

கனடாவைச் சேர்ந்தவர் 36 வயது பெண். டொராண்டோவில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில், அந்த பெண் தனது நண்பர்களுடன் இரவு ஓட்கா குடித்துள்ளார். அதன்பின் தூங்கியுள்ளார். காலையில் அவர் எழுந்து பார்த்ததில், கால்கள் வழக்கத்தை விட 2 மடங்கு பெரிதாக வீங்கி நடக்க முடியாமல் இருந்துள்ளது.

மது அருந்திவிட்டு மட்டையான இளம்பெண்; அழுகிய கால்கள் - பகீர் பின்னணி! | Woman Drinking Vodka Ends Up With Rotting Leg

தொடர்ந்து அதிர்ச்சியான பெண் மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே மற்றும் சோதனைகளை எடுத்ததில், கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரவு முழுக்க கால்களில் ரத்த ஓட்டம் தடைப்படும் பொசிஷனில் வைத்துத் தூங்கினால் இந்த கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் ஏற்படுகிறது.

அழுகிய கால்கள்

இதனால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமல் போகவே, தசை மற்றும் நரம்பு செல்கள் சீக்கிரம் உயிரிழக்கத் தொடங்குகிறது. அதனையடுத்து, அந்த பெண்ணுக்குக் கால் அழுக ஆரம்பித்துள்ளது. உடனே அவரது இடது காலில் ஆப்ரேஷன் செய்து இறந்த நிலையில் அழுகிக் கொண்டிருந்த தசைகளை வெளியே எடுத்து வீக்கத்தைக் குறைத்துள்ளனர்.

மது அருந்திவிட்டு மட்டையான இளம்பெண்; அழுகிய கால்கள் - பகீர் பின்னணி! | Woman Drinking Vodka Ends Up With Rotting Leg

மேலும், காயத்தை அவரது தொடையிலிருந்து தோல் மற்றும் சதையின் ஒரு பகுதியை எடுத்து சரிசெய்துள்ளனர். அதற்குப்பின், ஓராண்டு மாத்திரைகள் எடுத்துள்ளார். ஆனால் தற்போது வரை அவரால் சாதாரணமாக நடக்க முடியவில்லை. மேலும், அவரது கால்விரல்கள் இப்போது கீழே சுருள ஆரம்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னுமே தனது கால் முழுமையாகச் செயல்படுவதைப் போலத் தெரிவதில்லை என்று அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார்.