நடுவானில் 24 வயது பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை - 47 வயது பேராசிரியர் அட்டூழியம்!
விமான பயணத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்
அதிகாலை 5.30 மணியளவில் டெல்லியிலிருந்து மும்பையை நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 24 வயதுடைய பெண் மருத்துவர் ஒருவரும், அவரின் பக்கத்து இருக்கையில் 47 வயதுடைய பேராசிரியர் ஒருவரும் பயணித்துள்ளனர்.
அப்போது விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரம் முன் பேராசிரியர் பெண் மருத்துவரை தகாத முறையில் தொட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பெண் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதில் தலையிட்ட விமான ஊழியர்கள் விமானம் மும்பையில் தரை இறங்கியதும் சஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்குப் பதிவு
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் 47 வயது பேராசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.