திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண் ஆசிட் வீசி கொலை - டெல்லியில் பயங்கரம்
டெல்லியில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பவானா பகுதியில் மோன்டு என்ற இளைஞர் திருமணமான பெண்ணிடம் உன்னை விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறி பல நாட்களாக துன்புறுத்தி வந்துள்ளார். அந்த இளைஞர் வற்புறுத்திய நிலையில் அப்பெண் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மோன்டு இருவாரங்களுக்கு முன் அப்பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மோன்டுவை போலீசார் பீகாரில் உள்ள பக்சர் மாவட்டத்தில் கைது செய்தனர்.மேலும் சம்பவம் நடந்த அன்று, மோன்டு அந்தப் பெண்ணை வற்புறுத்தி தனது அறைக்கு அழைத்து வந்து மீண்டும் இதுகுறித்து கேட்டுள்ளார். கணவரை விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மோண்டு அப்பெண்ணின் இரு கைகளையும் கட்டிவிட்டு, அவர் மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
மேலும் அந்த பெண்ணின் கணவரைக் கொல்லவும் மோன்டு திட்டமிட்டு, நாட்டுத் துப்பாக்கியை வாங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.