கவனம்: இந்த வகை மீன் சாப்பிட்டதால் மனைவி பலி - கோமாவில் கணவர்

Japan Malaysia Death
By Sumathi Apr 04, 2023 05:53 AM GMT
Report

 மீன் சாப்பிட்டு மனைவி உயிரிழந்த நிலையில், கணவர் கோமா நிலையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மூதாட்டி பலி

மலேசியாவில் முதியவர் ஒருவர் சமைப்பதற்கு வீட்டிற்கு மீன் வாங்கியுள்ளார். அதனை அவரது மனைவி(83) ஜப்பானிய முறையில் சமைத்துள்ளார். பின் இருவரும் சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து சிறிது நேரத்தில் இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கவனம்: இந்த வகை மீன் சாப்பிட்டதால் மனைவி பலி - கோமாவில் கணவர் | Woman Dies Husband Coma After Eating Fish Malaysia

இதில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார். முதியவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர்களின் மகன், "என் பெற்றோர் பல ஆண்டுகளாக அதே மீன் வியாபாரியிடம் தான் மீன் வாங்குகிறார்கள், என் தந்தைக்கு அது விஷம் உள்ள மீன் என தெரியவில்லை.

பபர் மீன்

அவர் தெரிந்தே இவ்வளவு கொடிய விஷமுள்ள மீன் ஒன்றை வாங்கி அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கமாட்டர்கள்” எனக் கூறினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் அந்த தேதியில் விற்கப்பட்ட அனைத்து மீன்களும் மாவட்ட சுகாதார அலுவலகம் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கவனம்: இந்த வகை மீன் சாப்பிட்டதால் மனைவி பலி - கோமாவில் கணவர் | Woman Dies Husband Coma After Eating Fish Malaysia

உணவைத் தேர்ந்தெடுப்பதில் குறிப்பாக ஆபத்துகள் இருந்தால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் பபர் மீன் பிரபல உணவாக உள்ளது. இது நச்சுத்தன்மை கொண்ட மீன் வகை. இந்த நச்சு தாக்கினால் 24 மணி நேரத்துக்குள் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் முறையாக பயிற்சி பெற்ற சமையல்காரர்களால் மட்டுமே அதன் விஷத்தன்மையை அகற்றிவிட்டு சமைக்க முடியும். சாதாரணமாக வீட்டில் அதனை சமைத்து சாப்பிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.