லிவ்-இன் ரிலேஷன்சிப்..14 முறை கட்டாய கருக்கலைப்பு - மணமுடைந்த பெண் தற்கொலை!
கட்டாயப்படுத்தி பெண்ணை கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளதால், அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லிவ்-இன் உறவு
டெல்லியின் ஜெய்த்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளனர். இந்தியில் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் உடல் ரீதியான உறவை ஏற்படுத்திக் கொண்டதாகவும், இதனால் 14 முறை கட்டாய கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும்
ஆனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாகவும், தற்கொலையைத் தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவருடன் பாதிக்கப்பட்ட 33 வயது பெண் லிவ்-இன் உறவில் இருந்ததாகவும்,
தற்கொலை
பின்னர், அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நொய்டாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துணை காவல்துறை ஆணையர் இதுகுறித்து கூறுகையில், "ஜூலை 5 அன்று, ஜெய்த்பூரில் ஒரு பெண் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
14 முறை கருக்கலைப்பு
உடனடியாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் கடந்த 7-8 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
பீகாரில் உள்ள முசாபர்பூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சவுத் எக்ஸ்டென்ஷனில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணின் கணவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Brain Teaser Maths: '10+5=இற்கு விடை 35' எனில் வினாக்குறி இருக்குமிடத்தில் என்ன விடை வரும்? Manithan
