மெரினா பீச்சில் சுண்டல், பானிபூரி சாப்பிட்ட இளம் பெண் உயிரிழப்பு - ரயிலில் கதறிய நண்பர்கள்
மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றவிட்டு நண்பர்களுடன் மின்சார ரயிலில் திரும்பி கொண்டிருந்த போது வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார ரயிலில் உயிரிழந்த இளம் பெண்
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோனிஷா இவர் நேற்று சென்னை மெரினா கடற்கரைக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அங்கு பொழுதை கழித்த மோனிஷா கடற்கரையில் விற்கப்பட்ட பானிபூரி, சுண்டல், சோளம் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பின்னர் மெரினாவை சுற்றி பார்த்துவிட்டு பீச் முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயிலில் ஏறி திருவான்மியூருக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
ரயில் மயிலாப்பூர் நிலையம் அருகே வந்த போது திடீரென வாந்தி எடுத்து மோனிஷா மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன மோனிஷாவின் நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதித்தனர்.
பானிபூரி, சுண்டல், சோளம் தான் காரணமா?
மோனிஷாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அவருடன் வந்த நண்பர்கள் கதறி துடித்து அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னை கடற்கரைக்கு சென்ற போது பானிபூரி, சுண்டல், சோளம் உள்ளிட்ட திண்பண்டங்களை உட்கொண்டதால் தான் அவர் உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.