நாய் செல்லமாக நக்கியதில் உயிரிழந்த பெண் - டாக்டர் சொன்ன காரணம்!
நாய் நக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய் செய்த செயல்
இங்கிலாந்து, அடில்பரோவைச் சேர்ந்தவர் ஜூன் பாக்ஸ்டர்(83). இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடலில் சிறிதாக காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது பேத்தி கெயிட்லான் என்பவரின் வளர்ப்பு நாய் அந்த காயத்தை நக்கியுள்ளது.
தொடர்ந்து பாக்ஸ்டரின் உடல்நிலை மோசமானது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதித்ததில் அவரது காயத்தில் பாஸ்டுரெல்லா மல்டோசிடா எனும் பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பாக்டீரியாக்கள் பெரும்பாலும் விலங்குகளிடமிருந்து கடி, கீறல் அல்லது நாக்கினால் நக்குவது போன்ற செயல்முறைகளின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நிலையில் சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் மற்றும் இதயப் பிரச்சனைகளுடன் போராடி வந்த ஜூன் உயிரிழந்தார்.
பெண் உயிரிழப்பு
இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, "முகம், கண்கள், மூக்கு, வாய் போன்ற சளி சவ்வுகள் உள்ள பகுதிகள் நாய்களால் நக்கப்படக் கூடாது. அவை மிகவும் உணர்வுள்ள மற்றும் ஊடுருவக்கூடியவை ஆகும். இதேபோல், திறந்த காயங்களையும் நாய்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்" என்கின்றனர்.
இந்த பாக்டீரியாவால் தொற்று ஏற்பட்டால் கடுமையான வலி ஏற்படும். தொற்று ஏற்பட்ட இடம், தோல் மற்றும் கீழ் திசுக்களில் கடுமையான வீக்கம் உண்டாகும். சில சமயங்களில் பாக்டீரியா நுரையீரலை தாக்கி மூச்சுத்திணறல், இருமல், நெஞ்சு வலி,
நிமோனியா உள்ளிட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவி செப்சிஸ் என்கிற தீவிரமான நிலையை கொண்டு வரும். இது உடல் உறுப்புகளின் செயலிழப்புக்கு வழிவகுத்து உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டை விடுவிக்க கட்டளையிட்ட தேசபந்து! சபையை அதிர வைத்த முஜிபூர் IBC Tamil
