பார்சலில் ஜுஸ் வாங்கி குடித்த பெண் உயிரிழப்பு..!
பார்சலில் ஜுஸ் வாங்கி குடித்த தாய், மற்றும் மகள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மகள் உயிரிழந்தார்.
பார்சலில் எமனாக வந்த ஜுஸ்
துாத்துக்குடி மாவட்டம் கயத்தாரு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு திருமணமாகிய சாந்தி என்ற மனைவியும் லட்சுமிபிரியா என்ற மகளும் உள்ளனர்.
சாந்தி கடந்த 11ம் தேதி கீழ பஜாரில் உள்ள பழக்கடை ஒன்றில் பழரசம் பார்சல் வாங்கி வந்து சாந்தியும், லட்சுமிபிரியாவும், அருந்தியுள்ளனர்.
மாலையில் இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவர்களை உடனடியாக மருத்துமனையில் அனுமதித்தனர்.
மகள் உயிரிழப்பு
பின்னர் மேல்சிகிச்சைகாக மதுரையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதித்தனர். இதனிடையே அவரது மகள் லட்சுமி பிரியா உயிரிழந்தார்.
சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.